இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர் இப்ராஹிம் ஹூட், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துல் ரசாக் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்.







