திருகோணமலையில் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனை காரணமாக அப்பிரதேச மக்கள் கடும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இடை விடாத மழை பெய்து வருகின்றது.
இதனால் வயல் நிலங்கள்இ பள்ளப்பகுதிகள் போன்றன நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
கந்தளாய் – பேராறு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள்.
மேலும்இ கந்தளாய் முள்ளிப்பொத்தானைஇ தம்பலகாமம்இ புல்மோட்டைஇ சூரியபுரஇ ஜயந்திபுர போன்ற பகுதிகளில் மழை நீர் அதிகரித்துக் காணப்படுவதோடு தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வீதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுங்கின்றமை குறிப்பிடத்தக்கது.






