திருகோணமலையில் உள்ள விளையாட்டுக் கழகமொன்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
உவர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ள குமரன் விளையாட்டுக் கழகச் சீரமைப்புப் பணிக்காக, திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் ஒன்பது இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருகோணமலை நகரசபை உவர்மலை வட்டார உறுப்பினர் சி .யுவராஜ் வேண்டுகோளுக்கமைய இந்நிகழ்வு இடம்பெறுள்ளது.
இதற்கான காசோலையைத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இன்று வழங்கி வைத்தார்,
கனடாவில் வதியும் இலட்சுமணப் பெருமாள் குடும்பம் இப்பணிக்கான அனுசரணையை வழங்கி இருந்தமை குறிப்பிடத் தக்கது.






