நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்: குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு, சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றுஇரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன், எதிரே வந்த கன்ரர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கறுவாக்கேணியைச் சேர்ந்த 51 வயதுடைய து.விஜயநாதன் எனும் 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply