யாழ்ப்பாணத்தில் நேற்று கனமழை பொழிந்த நிலையில், யாழ் குடாநாட்டு வீதிகளில் வெள்ளம் தேங்கி நின்றதால், யாழ் மாநகர முதல்வர் தலைமையிலான சுகாதார ஊழியர்கள் களத்தில் இறங்கி அடைபட்டிருந்த வாய்க்கால்களை சுத்தம் செய்தபின்னர் வீதிகளில் தேங்கிய நீர் வழிந்தோடியது.
இந்நிலையில், மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் ஏனைய சுகாதார ஊழியர்கள் போல் உடை அணிந்து சுகாதார ஊழியர்களுடன் இணைந்து கழிவு வாய்க்கால்களில் இருந்த கழிவுகளை அகற்றியுள்ளார்.
அவரது செயற்பாடு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபனின் செயற்பாட்டை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்






