ஆபத்தான வலயங்களில் உள்ளவர்களை பலவந்தமாக வெளியேற்ற நடவடிக்கை!

ஆபத்தான வலயங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வெளியேறாதவர்களை பலவந்தமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சீரற்ற வானிலையால் 17 மாவட்டங்களை சேர்ந்த 126 பிரதேச சபை பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply