போராட்டத்தில் உயிரிழந்த ஆசிரியை: வடமாகாண பாடசாலைகளில் நாளை அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு!

அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு, திடீர் மாரடைப்பால் உயிரிழந்த ஆசிரியைக்கு நாளை வடமாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டத்தின் போது, திடீர் மாரடைப்பு காரணமாக மாத்தறை தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியரான வருணி அசங்கா என்பவர் உயிரிழந்தார்.

அவரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காலையில் 5 நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்குமாறே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சஹ்ரான் சந்திக்கவில்லை! சரத் வீரசேகர

Leave a Reply