வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா!

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து திணைக்களம் மூடப்பட்டுள்ளதுடன், பணியாளர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலையத்தின் முன்பாக அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் இருவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திணைக்களத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய பணியாளர்களை இரண்டு நாட்களிற்கு வீட்டில் இருந்து பணிபுரிய பணிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேவை நிமித்தம் திணைக்களத்திற்கு செல்வதை தவிர்த்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply