யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,261 குடும்பங்களைச் சேர்ந்த 34,075 நபர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதான மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
இன்று பிற்பகல் 3.30 மணி வரையிலான மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு விபரங்களை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் என்றவகையிலே 5 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில், 111 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






