குரங்குகளுக்கு வைத்த பொறியில் சிக்கி உயிரிழந்த விவசாயி

ஊவா பரணகம – அம்பகஸ்தோவ பிரதேசத்தில் குரங்குகளுக்கு வைத்த மின் பொறியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

67 வயதான ஜீ.எஸ்.எம். செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர், கிழங்கு பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க மின்சார பொறி ஒன்றை வைத்துள்ளார்.

தனது காணிக்கு அருகில் செல்லும் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு கம்பியில் இணைப்பை ஏற்படுத்தி குறித்த நபர் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுள்ளார்.

எனினும், பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வைத்த மின்சார பொறியில் குறித்த நபரே சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை, காணிக்கு அருகில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply