மதுபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் – திருமலையில் சம்பவம்

திருகோணமலையில்இ மதுபோதையில் மாமியாரை தாக்கிய மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்இ

ஒரே வீட்டில் மாமி மற்றும் அவரது மனைவிஇ பிள்ளைகள் வசித்து வந்துள்ளனர்.

நேற்றிரவு மதுபோதையில் வந்து மனைவியை தாக்கிய போது மாமியார் குறுக்கே வந்து மருமகனை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோபம் கொண்ட மருமகன் தனது மாமியாரை தடியாள் சராமரியாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்துஇ மாமியார் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்.டுள்ளார்.

இந்த நிலையில்இ குறித்த மருமகன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை -கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவரைஇ திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply