சீரற்ற காலநிலையால் யாழில் பாதிக்கப்பட்டோர் 34,219 பேராக அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 320 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்தோடு தற்போது 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 47 குடும்பங்களைச் சேர்ந்த 164 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply