2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விபரம்

Ø பட்டதாரிப் பயிலுநர்களுக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம்

Ø அதிபர், ஆசிாியர்களின் சம்பள முரண்பாட்டைச் சீராக்க ரூ.30,000 மில்லியன்

Ø காணாமலாக்கப்பட்டோருக்கு ரூ.300 மில்லியன் இழப்பீடு

Ø பழிவாங்கப்பட்டோருக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு

Ø அரச அலுவலர்கள் மோ. சைக்கிள் பெற ரூ.500 மில்லியன்

Ø அரச அலுவலர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக உயர்வு

Ø எம்.பிக்களின் ஓய்வூதியத் தகுதிக் காலம் 10 வருடங்கள்

Ø நாடு முழுவதும் தடையற்ற 5ஜி வலையமைப்பு

Ø அரச அலுவலகங்களில் புதிய கட்டடங்கள் அமைக்க 2 வருடங்கள் தடை

Ø அரச அலுவலர்களுக்கான எாிபொருள் 5 லீற்றரால் குறைப்பு

Ø அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான மாதாந்த தொலைபேசிக் கட்டணக் கொடுப்பனவு 25 வீதத்தால் குறைப்பு

Ø அனைத்துப் பாடசாலைகளுக்கும் நவீன இணைய வசதி

Ø சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகாிப்பு

Ø மது விலையை அதிகரித்து லாபம் பெற முடிவு

Ø காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, மேலதிகமாக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலப்பகுதியில் காணாமல்போனவர்களின், உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.

Ø கடந்த ஆட்சியின்போது அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். “ 2015 – 2019 காலப்பகுதியில் கடந்த அரசால், எதிர் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்போதைய ஆட்சியாளர்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. எனவே, மேற்படி காலப்பகுதியில் அநீதி இழக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 100 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு முன்மொழிகின்றேன். அரச பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளுக்காக அதிகாரசபை ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ.100 பில்லியன்

Ø புதிய வியாபாரங்களுக்கு 2022 இல் பதிவுக்கட்டணம் இல்லை
மதத்தலங்களை புனரமைக்க ரூ.500 மில்லியன் ஒதுக்கீடு.

Øஉலக சந்தையில் எாிபொருள், எாிவாயு உள்ளிட்ட ஏனைய பொருள்களின் விலை அதிகாிப்பால் உள்நாட்டில் பொருள்களின் விலைகள் அதிகாித்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு ரூ.31,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கைதிகளின் நலன்களுக்காக மேலதிகமாக ரூ.200 மில்லியன் ஒதுக்கீடு.
பொதுமக்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் திணைக்களத்துக்கு ரூ.500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வனஜீவராசிகள் பாதுகாப்புக்கென ரூ.1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு ரூ.1500 மில்லியன் ஒதுக்கீடு.

Ø தொற்றுக்காலத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ரூ.700 மில்லியன் ஒதுக்கீடு.

Ø கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மொத்த, சிறு, மத்திய வியாபாரிகளுக்கு ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கீடு.

Ø கொரோனாக் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டமையால் பாதிக்கப்பட்ட பஸ், வேன் உரிமையாளர்களுக்கு ரூ.400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
எம்.பிக்களின் தொகுதிகளுக்கு மேலதிகமாக ரூ.5 மில்லியன் ஒதுக்கீடு.

Ø மலையகத்தில் புதிய குடியிருப்புகளை அமைக்க ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு.
வீடு மற்றும் நகர அபிவிருத்திக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வீதி அபிவிருத்திக்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

Øபற்றிக் ஆடை உற்பத்தி உள்ளிட்ட தேசிய உற்பத்திகளை அதிகரிக்க 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் ஊடாக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
பெருந்தோட்ட, சிறு பயிர்ச்செய்கைகளின் விளைச்சலை அதிகாிப்பதற்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

Ø ஓய்வூதியம் பெறாத சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதியத் திட்டம் வழங்குவதற்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அரச நிறுவனங்களில் மின்சார செலவை குறைப்பதற்கு சூாிய சக்தியை உபயோகிக்க பரிந்துரைகள்.

Leave a Reply