குண்டு வைத்து தகர்க்கப்படவுள்ள மன்னாரில் உள்ள நீர்த்தாங்கி

மன்னார் மாவட்டத்தில் 1985ஆம் ஆண்டு துறைமுகங்கள் அதிகார சபையால் அமைக்கப்பட்ட நீர்த் தாங்கி நாளைமறுதினம் இராணுவத்தினரால் குண்டு வைத்து தகர்க்கப்படவுள்ளது.

மன்னார், உப்புக்குளம் கிராமத்தில் துறைமுகம் மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் அப் பகுதிக்கான நீர் விநியோகத்திற்காக இந்த நீர்த்தாங்கி கட்டப்பட்டது.

இவ்வாறு கட்டப்பட்ட தாங்கியில் இருந்து எந்தவொரு நீர் விநியோகமும் மேற்கொள்ளாத காரணத்தால் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது.

அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மக்கள் குடியிருப்புக்கள் அதிகரித்துவிட்டன. பழுதடைந்த நீர்த்தாங்கி இடிந்துவிழும் நிலையில் காணப்படுவதனால் ஆபத்து ஏற்படும்.

எனவே, இந்த நீர்த்தாங்கியை இடித்து அழிக்க திட்டமிடப்பட்டு, அனுமதிகள் பெறப்பட்டதன் அடிப்படையில் அழிக்கப்படவுள்ளது.

இந்த நீர்த்தாங்கியே நாளைமறுதினம் காலை 8.30 மணியளவில் இராணுவத்தின் பொறியியல் பிரிவின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் உள்ள பாடசாலைகளில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Leave a Reply