நாடு முன்னொருபோதுமில்லாத பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் இக்கட்டான தருணத்தில் 2002 ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.
நாடு கடுமையான அந்நிய செலாவணி பற்நாக்குறை மற்றும் அதிகரித்து வரும்பணவீக்கத்தின் மத்தியில் இருக்கும்நிலையில் சாமான்ய மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்கும் அறிவிப்புகள் குறைவாக உள்ள போதும் அரசாங்கத்தின் செலவினங்களை அதிகளவுக்கு கட்டுப்படுத்தும் முன்மொழிவுகளை வரவு செலவுத்திட்டம் உள்ளடக்கியிருக்கிறது
இதேவேளை அரசாங்கம் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8மூ ஆகக் குறைக்குமென்று
நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார் .
ஆயினும் 2021 ஆம் ஆண்டிற்கானது விழும் இலக்கை அரசாங்கம் தவறவிட்டிருக்கிறது. 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை 2022 ஜனவரி முதல் அரசாங்கம் அமுல்படுத்தும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
‘மக்களின் வாழ்க்கைஇ வாழ்வாதாரங்கள்இ வருமான ஆதாரங்கள் மற்றும்இ தொழில் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டத்தை நாங்கள் கடந்து வருகிறோம்இ ‘ என்று அமைச்சர் குறிப்பிட்டார் .
‘இந்த சவால்களுக்கு மத்தியிலும்இபொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்துவதற்கும் சவால்களை சமாளிப்பதற்கும் தேவையான அனைத்து பலங்களையும் தாங்கள் பெற்றுள்ளோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘ என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
நடப்பாண்டிற்கான 2021 சிபுதிய 11.1மூ பட்ஜெட் பற்றாக்குறை ஜூன் மாதத்தில் அரசாங்கம் நிர்ணயித்த 9.5மூ இலக்கை விட அதிகமாக உள்ளதுஇ இது 8.9மூ இல் இருந்து
திருத்தப்பட்டது.
கணிசமான அளவு வரிகள் உள்ள இ அடுத்த ஆண்டு வருவாயை 46மூ அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறதுஇ அதே நேரத்தில் செலவு 16மூ மட்டுமே உயரும் என்று எதிர்
பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும்இ அரச மற்றும் மூலதனச் செலவுக் குறைப்புகளால் பொருளாதாரத்தில் சில இறுக்கங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
மத்திய வங்கி 2021 ஆம் ஆண்டிற்கான இலக்கான 5மூ வளர்ச்சியை மாற்றாமல் வைத்திருப்பதாக அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது .
சுற்றுலாஇ ஆடைத் தொழில் இ விவசாயம் போன்ற குறிப்பிட்ட துறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான ஆதரவு யோசனைகளை பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது .
2022 ஆம் ஆண்டில் இலங்கை 4.3 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது அதேவேளை அக்டோபரின் இறுதியில் கையிருப்பு2.6 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.
”உலகளாவியசவால்களுக்கு மத்தியில் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கிறோம் என அமைச்சர் பசில் ராஜபக்சகூறினார். ‘பல நாடுகள் உள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றனஇ காலநிலை பிரச்சினைகள் உள்ளனஇ பணவீக்கம் மற்றும் கொரோனா வைரஸ் நெருக்கடிகள் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைத்துள்ளன.என்று அவர் தெரிவித்ததுடன் நாடுசுமார் 500 பில்லியன் ரூபா வருமானத்தை இழத்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும்இஇலங்கை கடன் வழங்குநர்களுடன் நெருக்கமாகச் செயற்படுகிறதெனவும் அவர் தெரிவித்திருக்கிறார் ஆயினும் நாடு கடுமையான
அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் நடுவில் உள்ளதுஇ
அரசாங்கம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான உத்தேச சம்பள அதிகரிப்புக்கு 30 பில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக பசில் ராஜபக்சதெரிவித்திருக்கிறார்
இந்த ஒதுக்கீடுஇ பல மாதங்களாக நீடித்த ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை திறம்பட முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
‘இது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்திற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 109இ000 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலாக உள்ளது’ என்று அமைச்சர் கூறியுள்ளார்
ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வை ஒரே தடவையில் வழங்குவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சஷ இணக்கம் தெரிவித்ததையடுத்துஇ ஆசிரியர் சங்கங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுக்கு வெற்றியில் முடித்தது.






