பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சேவையாளர்களுக்கு பாதீட்டினூடக நிவாரணம்!

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சேவையாளர்களுக்கு பாதீட்டினூடக நிவாரணம் வழங்கப்பட்டமைக்காக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கும் நிதி அமைச்சருக்கும் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துரைத்த சங்கத்தின் தலைவர் எல்.மல்சிதசில்வா, செயலாளர் லலித் சந்திரசிறி, பிரச்சார செயலாளர் சமன் பிரியந்த பெரேரா ஆகியோர் நிதி அமைச்சருக்கு இதன்போது நன்றியை தெரிவித்துள்ளனர்.

கொவிட் நிலைமையால் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினோம். நாமும் போராட்டங்களை மேற்கொண்டோம். எமது சங்கத்தின் உறுப்பினர்களுக்காகவே நாம் இவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டோம்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் உறுப்பினர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வாகன கடன்களை செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டோம்.

எமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் 48,000 உறுப்பினர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்த அத்தனை உறுப்பினர்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாரிய நிவாரணத்தை வழங்கியுள்ளார்.

உண்பதற்கு உணவை பெற்றுக்கொள்ளவும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டோம்.

இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்ட எமக்கு இம்முறை பாதீட்டினூடாக நிதி அமைச்சர் பாரிய நிவாரணத்தை வழங்கியுள்ளார்.

எமக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், மத்திய வங்கி உள்ளிட்ட தரப்பினரும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

இந்தக் கலந்துரையாடல்களின் பிரதிப்பலனாகவே பாதீட்டினூடாக எமக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் பெற்றோரின் பெறுமதிமிக்க மாணவர் செல்வங்களை அழைத்துச் செல்லும் உன்னத பணியை ஆற்றிவருகின்றோம்.

நாட்டின் எதிர்காலத்தை சுமக்கும் எமது மனது நிறைவடைய வேண்டும். மன வேதனை அடைந்த நபர்களுக்கு மாணவர்களுக்கான போதிய பாதுகாப்பை வழங்க முடியாது.

எனவே பாதீட்டினூடாக எமக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்தால் எமது சேவையை மேலும் சிறப்புடன் தொடர முடியும்.

Leave a Reply