

கவிஞர் பாண்யூரன் மாஸ்டரின் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இலக்கியவியலாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டு வரும் வரிசையில் கவிஞர் பாண்டியூரன் கவிதைகள் நூல் வடிவம் பெற்று வெளியிடப்பட்டது.
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் மறுமலர்ச்சி சனசமூக நிலைய ஆலோசகரும் எழுத்தாளருமான தமிழ்மணி உமா வரதராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நூல் வெளியீட்டை வெளியிட்டுவைத்தார்.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், கல்முனை வடக்க பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் தமிழ் துறை தலைவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ரோசிரியர் றமீஸ் ஏ அப்துல்லா, ஆலோசகர், மறுமலர்ச்சி சனசமூக நிலையம் டாக்டர் திருமதி. புஸ்பலதா லோகநாதன், ஆலோசகர், மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. சபா சபேஷன், பிரதிப் பதிப்பாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் திரு. சஞ்சீவி சிவகுமார், உபதலைவர் மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. பா. செ. புவிராஜா, செயலாளர் மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. சி. புனிதன், உபசெயலாளர் மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. சிவவரதராஜன், கவிஞரின் குடும்ப உறுப்பினர் செல்வி நடேசன் கௌசிகா ஆகியோர் உரை நிகழ்த்தினர். கவிஞர் பாண்டியூரன் மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாண்டியூரனின் கவிதை நூல் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு செய்த தமிழ் மணி உமாவரதராஜன் ,சிவவரதராஜன் ஆகியோருக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் நவநீதன் விஷேட நன்றிகளை தெரிவித்ததார்.
நிகழ்ச்சித் தொகுப்பை ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். நிகழ்வை கல்முனை நெற் நேரலையாக ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.இவ் விழாவானது சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது.





