ஓடி ஒழிந்த நிதி அமைச்சர் – எதிர்க்கட்சி கூச்சல்

நிதி ஒதுக்கீடு தொடர்பில் சபையில் கதைப்பதற்கு நாம் வந்தால் இன்று நிதி அமைச்சர் ஓடி ஒழிந்து விட்டார் என நாடளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி நாடளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் சபையில் தற்போது இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நிதி சார்பான விவாதம் இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.ஆனால் சபையில் நிதி அமைச்சர் இல்லை,பதில் அமைச்சர்கள் இல்லை.பிறகு எதற்கு இந்த விவாதம்.நிதி அமைச்சர் ஓடி ஒளிந்து விட்டார்.

உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் தான் கொரோனா பாதிப்பு இருந்தது.ஆனால் எம்மை விட சிறிய நாடுகள் தமது மக்களை வரிசையில் விட வில்லை.அரசுக்கு எதிராக போராடுவதற்கு விடவில்லை.

நாம் நாட்டை ஒப்படைக்கும் போது 2000 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானத்துடன் கொடுத்தோம்.

நீங்கள் இப்போது நாட்டு வளங்களை விற்று கூட நாட்டின் கடனை அடைக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply