
எம்.ஏ சுமந்திரன் எம்.பி உட்பட மூன்று சட்டநிபுணர்கள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை அமெரிக்காவின் நிர்வாகத் தலைநகர் வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத்துள்ள நிர்வாக இராஜாங்க அமைச்சு அதேசமயம் கூட்டமைப்பின் இணக்கத்தோடு உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுஐவயும் அக்கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது என்பதும் தெரியவருகிறது.
இன்றுமுதல் அடுத்த ஐந்து நாள்களுக்கு இக்குழுவினர் அமெரிக்க உயரதிகாரிகள் மட்டத்துடன் இராஜதந்திரக் கலந்துரையாடலில் ஈடுபடுவர்.
அமெரிக்க நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை முதல் ஐந்து வௌ;வேறு சந்திப்புக்களில் இந்தக் குழுவினர் பங்குபெறவுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ சுமந்திரன், கனகேஸ்வரன், சட்ட அறிஞர் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சுமந்திரனுடன் இணைந்து பணியாற்றிய பிரதிநிதிகள் இந்தச் சந்திப்புக்களில் பேரவையின் சார்பில் பங்குபற்றினர் எனத் தெரிகின்றது.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் முன்னாள் யாழ். குரு முதல்வர் வண. இமானுவல் அடிகள் உலகத் தமிழர் பேரவையின் தலைவராக நீண்ட காலம் செயற்பட்டவர் என்பது தெரிந்ததே
அந்த அமைபபின் சார்பில் ஆஸ்திரேலியாவில் இருந்து கலாநிதி கண்ணப்பர் முகுந்தன் (பொறியியலாளர்), பவகுணன்(லண்டன் மற்றும் இந்தியா), சட்டத்தரணி வாணி செல்வராஜா(கனடா), ஆகியோரும் அமெரிக்காவில் இயங்கும் மற்றைய செயற்பாட்டாளர்களும் இந்த பேச்சுக்களுக்காக அமெரிக்கா இராஜாங்க அமைச்சினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இக் கழுவினருக்கு 5 சந்திப்புக்கள் உள்ளன. உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களும் தே நேரம் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றனர் என்பது அறிய வந்தது.






