மன்னார் கோந்தை பிட்டி பகுதியில், அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது
நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நீர்தங்கி ஒன்று, இன்றைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் தகர்கப்பட்ட போது, அவற்றில் இருந்து ஆந்தைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன் நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று வெடிப்பின் காரணமாக இறக்கை ஒன்று உடைந்த நிலையில் தாங்கியின் சிதைவுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.








