கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கொடிகாமம், கொயிலாமனை மக்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாலை கிராமசேவகர் பிரிவின் எல்லைக்குட்பட்ட தெருவை, சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்கு ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்கின்றனர். இடுப்பளவுக்குள்ளான குளத்து நீரிற்குள்ளால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் துன்பியலான நிலையில் உள்ளனர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவரும் இவ் வீதியை, சிலர் அது தமது காணி எனத் தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியை அடைத்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தமது வீதிக்கு உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குடியிருக்கும் பாதைக்குள் வெள்ள நீரை வெட்டிவிட்டு சேதம் விளைவிக்கும் அரச உயரதிகாரிகள்! வடமாகாண ஆளுநருக்கு மக்கள் கடிதம்!

Leave a Reply