யாழ்ப்பாணம், அளவெட்டியை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை காவேரி பிரதீபன் (வயது 29) இறைவனடி சேர்ந்தார்.
இவர், மூன்று வருடங்களாக அப்லாஸ்டிக் அனீமியா என்ற இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் மைக்ளோடிஸ் பிளாஸ்டிக் அனீமியாவாக முற்றிப்போய் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்தார்.
மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 மீற்றர் தொடர் ஓட்டங்கள், ஹாக்கி, நெட்பால், வாலிபால், எல்லே இப்படி பல விளையாட்டுக்களில் தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களையும் இவர் வென்றெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







