மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போராட்டம் நடாத்தி வருகின்றார்.
இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளதை காணமுடிகின்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும், அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தை குறித்த பிக்கு முன்னெடுத்து வருகின்றார்.
பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்கு போராடிவருவதாகவும் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுவது இதுதானா எனவும் பொதுமக்கள் கேள்வியெழுக்கின்றனர்.
சுமந்திரனுக்காக நிறுத்தப்பட்ட தமிழரசுகட்சி மத்தியகுழு கூட்டம்! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் விசனம்






