
அரச பாடசாலைகளில் எஞ்சியுள்ள அனைத்து வகுப்புகளையும் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், வரவு – செலவுத் திட்டம் 2022 இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போது அவர் இன்று(15) இதனை கூறியுள்ளார்.
தற்போது, ஆரம்பப் பாடசாலைகள், ஆரம்பப் பிரிவுகள் மற்றும் உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளில் மாணவர்களுக்காக நேரடியான கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் பல மாதங்கள் மூடப்பட்ட, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்படும் என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





