அலவ்வ, பன்கொல்ல பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மாடி வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீடு பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெடிப்புக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில், போயவலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






