தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளரை நியமிப்பதில், ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர் என்ற வகையில் சரியானதை செய்ய முடியாது என்றால், வேறு வேலையை பார்ப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்திற்கு அமைய அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனக்கே உள்ளது.
இதனடிப்படையில், அதிகாரி யார் என்பதை தீர்மானிப்பது, நியமனக் கடித்தில் கையெழுத்திட்டு நானே வழங்கினேன். அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்ட போது, சில விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
சில தெரிவுகள் தற்காலிகமாக முன்வைக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த போது, அவை சம்பந்தமாக விடயங்களை முன்வைத்து, தகுதியான அதிகாரியை தெரிவு செய்யும் போது, சில குறைகள் இருக்குமாயின் அவை குறித்து விரிவாக கலந்துரையாடப்படும். நான் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடினேன்.
அதன்போது, ஏற்பட்ட இணக்கத்திற்கு அமைய அனைத்து தகுதிகளையும் கொண்டவரை நியமிக்க தீர்மானித்தோம். அந்த துறை சம்பந்தமான சில தகுதிகள் உள்ளன. இதன்படி, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் அமைச்சரின் இணக்கத்திற்கு அமைய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வழங்கும் உத்தரவை நடைமுறைப்படுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்பது சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சில முரண்பாடுகள் இருந்ததால், அதனை நான் நிறுத்தினேன் என அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை பகைத்துக் கொண்ட கோட்டாபய! லக்ஸ்மன் கிரியெல்ல






