
அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இலங்கையில் சில தினங்கள் தங்கியிருந்து அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஐ.நா. வுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள அவர், இந்தவிடயத்துடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் தரவுகளைத் தனக்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோரியுள்ளார்.
பிரதானமாக தொழிலாளர் உரிமைகள், அடிமைத்துவம், வலுக்கட்டாயமாகத் தொழிலில் ஈடுபடுத்துதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளடங்கலாக அடிமைத்துவத்தின் சமகால வடிவங்களுடன் தொடர்புடைய தகவல்களை அனுப்பிவைக்கலாம் என்று ரொமோயா ஒபொகாடா தெரிவித்துள்ளார்.
இந்த விடயதானங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளை அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் ohchr-srslaveryShun.org என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடாவுக்கு அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





