சுமந்திரன், சாணக்கியன் வெளிநாட்டு பயணம் தொடர்பில் கருத்துக்கூற விரும்பவில்லை! சம்பந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோரை கலந்துரையாடல் ஒன்றுக்காக, இரண்டு நாடுகள் அழைத்துள்ளமை தொடர்பில் கருத்துக்கூற விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கலந்துரையாடல் நடத்த வருமாறு கனடாவும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த விடயம் குறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி ஒட்டோவாவிலும், 25 ஆம் திகதி லண்டனிலும், வெளிவிவகார அதிகாரிகளுடன் இவர்கள் இருவரும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனையில் ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபாரக் கும்பல் கைது!

Leave a Reply