பாடசாலை மாணவர்களில் 10 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

<!–

பாடசாலை மாணவர்களில் 10 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! – Athavan News

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாகவே, பாடசாலை மாணவர்கள் 10 இலட்சம் பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தமைக்கு அமைவாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply