பட்டிப்பளை பிராந்தியத்துக்கான மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் வியாழேந்திரன்!

<!–

பட்டிப்பளை பிராந்தியத்துக்கான மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் வியாழேந்திரன்! – Athavan News

பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால் நடை மற்றும் சிறுபொறுளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பட்டிப்பளை பிராந்தியத்திற்கான மக்கள் பணிமனை அலுவலகமானது கடுக்காமுனையில்   (திங்கட்கிழமை)  திறந்துவைக்கப்பட்டது.

முற்போக்குதமிழர் அமைப்பின் பிரதான இணைப்பாளரும் மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினருமான வை.சந்திரமேகன் உள்ளிட்ட முற்போக்குதமிழர் அமைப்பின் இணைப்பாளர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு மண்முனை பாலத்திலிருந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டு, பாண்டு வாத்திய இசை முளங்க, வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சரினால் நாடா வெட்டி மக்கள் பணிமனை மிகவும் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.


Leave a Reply