
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்டிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி நாளை முதல் மேல், தென் மாகாணங்களிலும் மற்றும் அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும் இந்த திட்டமானது ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதுவரையில் 10 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






