தாய், தந்தையை இழந்த சிறுமிக்கு கரம் கொடுத்த அமைப்பு

வவுனியா – சிவபுரம் கிராமத்தில் தாய், தந்தையை இழந்த சிறுமியொருவருக்கு, தாய்த்தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பில் நிரந்தர வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி, தாய் தந்தையை இழந்து தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தாய்த்தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பின், கனடாவில் வசித்து வரும் கு.குணசேகரின் மூன்று இலட்சம் பெறுமதியான நிதி அனுசரனையோடு குறித்த வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியின் கல்விக்கு உதவியாக துவிச்சக்கரவண்டி மற்றும் கற்றல் உபகரணங்களும், ஒரு வருடத்திற்கான கல்விக்கான கொடுப்பனவு, உடை, உலர் உணவு பொருட்கள் போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.ரூபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பங்குத்தந்தை ஜெகநாதன், சிவபுரம் கிராமசேவையாளர், .கிருசிகா, கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நாகேந்திரம் சமூக செயற்பாட்டாளர் கவிஞர் மாணிக்கம். ஜெகன் மற்றும் தாய்த்தமிழ் பேரவையின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply