தமிழகத்தில் உயிரிழந்தது பாதாளக்குழு உறுப்பினர் அங்கொட லொக்கா என பரிசோதனையில் உறுதி!

தமிழகத்தின் கோயம்புத்தூரில் உயிரிழந்தது இலங்கையின் பாதாளக்குழு உறுப்பினர் அங்கொட லொக்கா என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக்குழுவின் உறுப்பினராக செயற்பட்ட அங்கொட லொக்கா இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் உயிரிழந்தார்.

கோவை, சேரன்மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக தெரியவந்தது.

திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொட லொக்கா, 2020 ஜூலை 4 ஆம் திகதி உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் போலிச்சான்றிதழ் பெற்று அங்கொட லொக்காவின் சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் திருப்பூரை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் அம்மானி தான்ஜி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசின் உதவியுடன் அங்கொட லொக்காவின் தாயார் சந்திரிகாவின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கோவையில் உயிரிழந்தது இலங்கை பாதாளக்குழு தாதா அங்கொட லொக்காதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு!

Leave a Reply