தொழில்துறை நிபுணர் ஒருவரின் கருத்தின்படி, ‘இயலாமையில் வாக்குமூலமே அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடாகும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கொரோனாவை காரணம் காட்டி, முன்னரும் அரசாங்கம் தொழிற்சங்கப்போராட்டங்களை தடுத்தது.
எனினும், அதன் தாக்கத்தையே அரசாங்கமே இப்போது அனுபவிக்கிறது. கொரோனாவை காரணம் காட்டி இன்றும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடிக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன.
இதனை உடனேயே நிறுத்தவேண்டும். ஞானசாரர் தலைமையிலான செயலணியின் மூலம் சிறுபான்மையினரை ஒதுக்கும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்ப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே இறுதித்தீர்வாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை! பிரதமர்






