2022 ஆண்டுக்கான பாதீட்டில் உள்ள வார்த்தைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன. எனினும் செலவுகளுக்கான வருமானங்கள் தொடர்பில் பாதீட்டில் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மலையக பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளை அகற்றி வீடுகளை அமைப்பதற்கான ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் வருடம் ஒன்றுக்கு 100 வீடுகளை மாத்திரமே நிர்மாணிக்கமுடியும்.
மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பொருளாதாரப்பிரச்சினைக்கு தீர்வுகள் இல்லை. மலையக மக்களுக்கான உரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். மலையக காணிகளை வெளியாருக்கு வழங்கவேண்டாம்.
நுவரெலிய மாவட்டத்தின் லிந்துலை பகுதியில் கிறிஸ்தவ மதச் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.






