வவுனியா இளைஞன் விசேட அதிரடி படையினரால் கைது!

Man in handcuffs behind his back

வவுனியாவில் வாகன இலக்கத்தகடுகளை போலியாக அச்சிட்டு வழங்கி வந்த இளைஞன் ஒருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள தனது வீட்டில் வாகனத்திற்குரிய இலக்க தகடுகளை போலியாக தயாரித்து வழங்கி வந்ததாக முல்லைத்தீவு விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், வவுனியா தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகடு அச்சிடுவதற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கணனி மற்றும் பிறிண்டர், இலக்கத்தகடு, அரச இலட்சனை போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண வைபவங்களுக்கு மதுபானம் விற்க தடை!

Leave a Reply