மேலும் 18 பேர் நேற்று கொரோனாவால் பலி!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,034 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 552,802 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 524,740 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியா இளைஞன் விசேட அதிரடி படையினரால் கைது!

Leave a Reply