இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவிடம் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் ஆஜராகியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அவரிடம் 7 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை மீண்டும் மூட வைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம்! பிரசன்ன ரணதுங்க






