பொன்னாலை பகுதியில் கசிப்பு விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயிரத்து ஐந்நூறு மில்லிலீட்டர் கசிப்புடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் எனக்கூறி பொன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் அடித்துடைக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் வாகனமே இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் நொறுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்டதோதோடு, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






