எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது! சன்ன ஜயசுமன

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மக்களை வீதிக்கு அழைப்பது ஒரு வீரச்செயல் அல்ல எனவும், எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும் தற்போதைக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களை வீதிக்கு அழைப்பது ஒரு வீரச் செயல் அல்ல, இது வருந்தத்தக்கது.

எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும் தற்போதைக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

கொரோனாச் சூழ்நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், மக்களைப் பாதிக்காமல் புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கசிப்பு விற்பனை செய்த பெண் கைது: தகவல் வழங்கியவரின் மோட்டார் சைக்கிள் அடித்துடைப்பு!

Leave a Reply