பரந்தன் சிவபுரம் பகுதியில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் வீட்டு முற்றத்தில் காணப்படுகின்றது.
இனந்தெரியாத சிலர் அதிகாலை 12 மணிக்குப் பின்னர், வீட்டிற்கு சென்று அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவர் அண்மையில் திருமணமானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.






