ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மையில் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் குறிப்பு ஒன்றை வழங்கிச் சென்ற நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவர், மனநலம் குன்றியவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.






