வவுனியா தர்மலிங்கம் வீதியில், அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுகின்ற காரணத்தினால் போக்குவரத்து நெரிசலை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தெரியவருகையில்,
வவுனியா தர்மலிங்கம் வீதியானது கடைத் தொகுதிகள் அதிகமுள்ள பகுதியாகும்.
வியாபார வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத நிழல் தரிப்பிடங்கள் அகற்றப்படவில்லை.
மக்களின் எதிர்ப்புக்கள் வரும்போது நகரபையினால் அவ்வப்போது அகற்றப்பட்டு பின்னர் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டுவிடும்.
இவ்வீதியில் வாகனங்கள் , முச்சக்கரவண்டிகள் , கனரக வாகனங்கள் தரித்து காணப்படுகின்றமையினால் பயணிக்க முடியவில்லை .
அத்துடன், கனரக வாகனங்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக தரித்து நின்று பொருட்களை இறக்குவதால் பாரிய வாகன நெரிசல்கள் காணப்படுகின்றது .
இதனால் அவ்வீதிகளில் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன .
அதேவேளை, குறித்த வீதியில் போக்குவரத்துப் பொலிசாரும் கடமையில் நிற்பது இல்லை .
இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் இவ் வீதியில் காணப்படுகின்றன.
எனவே, தர்மலிங்கம் வீதியுடனான போக்குவரத்தை சீரமைத்து மக்கள் பாதுகாப்புடன் பயணம் செய்வதற்கு வழியேற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .






