திருகோணமலை – கந்தளாய் பகுதியில் டிப்பர் ட்ரக் வாகனத்துடன் வேன் ஒன்று மோதியதில் ஐந்து பௌத்த பிக்குகள் படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலை-கண்டி பிரதான வீதி, கந்தளாய் 87 ஆம் கட்டை பகுதியில் டிப்பர் ட்ரக் வாகனத்துடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெறுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரனையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற டிப்பர் வாகனமும்,சேருவில ரஜ மகா விகாரையிலிந்து கம்பஹா பகுதிக்கு பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயங்களுக்குள்ளான ஐந்து பௌத்த தேரர்கள் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






