யாழ்ப்பாணம் நகரில் பழைய தபால் கந்தோர் வீதியில் உள்ள LOLC Finance நிறுவனம் முன்பாக வெள்ளம் தேங்கி நிற்பதால் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்துக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் இந்த வீதியை பயன்படுத்துவோர். சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அருகில் உள்ள வாகன தரிப்பிட நிலையத்திலும் அதிக வெள்ளம் தேங்கி காணப்படுகின்றது.
எனவே யாழ். மாநகர சபை இந்த வீதியில் வெள்ளம் தேங்கி நிற்காது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






