இலங்கையில் இன்று முதல் மழை குறையும்

இலங்கையின் இன்றைய வானிலையில் இன்று முதல் மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிா்வுகூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தொிவித்துள்ளது.

Leave a Reply