ஜனாதிபதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

புண்ணிய ஸ்தலத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறிநிவாச தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில், பாலாகாரப் பூஜையிலும் ஈடுபட்டார்.

ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களிடம், ஜனாதிபதி  சுமூகமாகக் கலந்துரையாடினார்.

Leave a Reply