
கொழும்பில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவராக காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் சவூதி அரேபிய அரசினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
காலிட் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி, வெள்ளிக்கிழமை (16) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்ததாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்





