தம்மிக்க விஜயசிங்க பதவி விலகியுள்ளார்

கொழும்பு, ஓக.06

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜயசிங்க அந்த நிறுவனத்தில் தனது கடமையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

சுற்றுலாத் துறை பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்ததன் கடைசி நாள் அக்டோபர் 5 என்று விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் , விஜயசிங்க வேறு அமைச்சின் கீழ் புதிய பொறுப்பை ஏற்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply