
22வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது நாடாளுமன்ற உறுப்பினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசியல்வாதிகள் நாட்டை நேசிப்பதால்தான் பிரித்தானியா போன்ற அரசியல் சாசனம் இல்லாத நாடுகள் முன்னேறி வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊழல் அரசியல்வாதிகளால் ஊழல் அரசியல் கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது என்றும் ஊழல் அரசியல் கலாசாரத்தால், ஊழல் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாட்டின் வறுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





